கோவையில் தவிர்க்கப்பட்ட பெரும் மதக் கலவரம்! ~ சஹாரா தமிழ்

ads

வெள்ளி, 26 ஜூலை, 2013

கோவையில் தவிர்க்கப்பட்ட பெரும் மதக் கலவரம்!

இந்தியா முழுவதும் இந்து மக்களிடையே மதவெறியை ஊட்டுவதன் மூலம், சிறுபான்மை மக்களுக்கு எதிராக மோதலை உருவாக்கி அரசியல் லாபம் சம்பாதிக்கும் ஈனப்பிழைப்பு நடந்து வருவதை அறிவோம்.

இதற்காக தம் சொந்த சமூகத்தினரின் சாவினைக்கூட கொண்டாடத் தயங்காத இழிபிறவிகளாக அம் மதவெறியர்கள் நம்மிடையே உலா வருகின்றனர். அவர்களுக்கு எப்படியாவது ஒரு சாவு தம் இன மக்களிடையே நடந்துவிட்டால் போதும்; அது கள்ள உறவுக்காக தம் இனத்தில் ஒருவனே போட்டுத் தள்ளியதாக இருந்தாலும் பரவாயில்லை. "அதனைச் செய்தவர்கள் முஸ்லிம்களே!" என்ற வதந்தியினை, சாவு நடந்த நிமிடங்களிலேயே அதிவேகத்தில் மக்களிடையே பரவச் செய்து அரசியல் ஆதாயம் தேடிவிட அவர்களால் முடிகிறது.

குறிப்பாக தமிழகத்தில் இந்து இயக்க தலைவர்கள் மீது நடத்தப்பட்டு வரும் கொலைகளை முன்னிறுத்தி, முஸ்லிம்கள் மீது பழி போடுவதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. எனினும் அவற்றில் பெரும்பாலானவை தோல்வியில் முடிந்து வருகின்றன.

"படுகொலைகளைச் செய்தவர்கள் முஸ்லிம்கள் தான்!" என்று போராட்டம் நடத்திய ஹிந்துத்துவா இயக்கங்களே வெட்கப்பட்டு தலைகுனியும் படியாக, அக் கொலைகளுக்கான காரணம் முன் விரோதம், தொழிலில் போட்டி, கொடுக்கல் வாங்கல், பெண் தொடர்பு, கந்து வட்டி, அரசியல் இலாபம் என்று பல்வேறு பரிமாணங்கள் தொடர் விசாரணைகளில் வெளிவந்து பல் இளிக்கிறது.

இத்தகைய சூழலில், இறையில்லங்களான பள்ளிவாசல் மீது வெடிகுண்டு வீச்சு, பன்றி இரத்தத்தை அல்லது இறைச்சியை வீசுதல் போன்ற சில்லறைத் தனமான செயல்களும் நடந்தேறி வருகின்றன.

அரசியல் லாபத்திற்காக, கோவையில் மீண்டும் ஒரு பெரிய மதக்கலவரத்தை ஏற்படுத்த ஹிந்துத்துவா விஷமிகள் முயற்சிப்பதாக பல்வேறு அரசியல் அமைப்புகள் கருத்தைத் தெரிவித்துள்ள சூழலில் கீழ்கண்ட செய்தி வெளியாகி மீண்டும் ஒருமுறை காவிச் சாயத்தை வெளுத்துள்ளது:

வழிபாட்டுத்தலத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு: இந்து முன்னணி முன்னாள் ஒன்றிய தலைவர் கைது!

கோவை துடியலூர் அருகே உள்ள வழிபாட்டுதலம் மீது கடந்த 22–ந்தேதி பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. (http://www.satyamargam.com/english/2158-tension-grips-kovai-outskirts-after-petrol-bomb-hurled-at-mosque.html) அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் ஏதும் நடக்கவில்லை.

http://mmimages.maalaimalar.com/Articles/2013/Jul/e6b28036-efbc-497f-a577-4b6e5f7ee640_S_secvpf.gifஆனால் குண்டு வீசிய குற்றவாளிகளை பிடிக்க துடியலூர் இன்ஸ்பெக்டர் கனகசுந்தரம், சப்–இன்ஸ்பெக்டர்கள் செல்வராஜ், ரத்தினகுமார், ராஜன், தண்டபாணி. ஏட்டுகள் பார்த்தீபன், வெங்கடாசலம் மற்றும் போலீசார் இரவு பகலாக தேடிவந்தனர்.

அதன்படி நேற்று மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தொப்பம்பட்டி பிரிவில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் தப்பியோட முயன்றார். போலீசார் அவரை மடக்கிப்பிடித்தனர்.

விசாரணையில் அவரது சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம், சிறுவாடையூர், கல்லூரை சேர்ந்த மதியழகன் (வயது 24) என்பது தெரியவந்தது.

மதியழகன் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் உறுப்பினராக இருந்தவர் என்றும், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய இந்து முன்னணி முன்னாள் தலைவர் என்பதும் தெரியவந்தது.

பா.ஜனதா முக்கிய பிரமுகர்கள் கொலை செய்யப் படுவதை கண்டிக்கவே நானும், இன்னொருவரும் சேர்ந்து பெட்ரோல் குண்டை வழிபாட்டு தலத்தின் மீது வீசினோம். எங்களை போலீசார் தேடி வருவதை அறிந்தோம். ஊரை வீட்டு தப்பிக்கும்போது போலீசில் பிடிபட்டேன் என்றார். உடன் வந்த இன்னோர் நபரை பற்றி தகவல் சொல்ல மதியழகன் மறுத்து வருகிறார். கைது செய்யப்பட்ட அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

மாலை மலர் (25-07-2013)

அதென்னமோ தெரியவில்லை, பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு கையும் களவுமாக ஹிந்துத்துவ அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் பிடிக்கப்படும்போது மட்டும் அவர்கள், "முன்னாள்" ஆர்.எஸ்.எஸ் உறுப்பினராகவும் பாஜக "முன்னாள்" நிர்வாகியாகவும் ஊடகங்களுக்கு ஆகிவிடுகின்றனர்! இது, மகாத்மா காந்தியின் படுகொலையிலிருந்தே துவங்கிவிட்ட மற்றொரு அதிசயம்!

எது எப்படியோ, புனித ரமளான் மாதத்தில் "ஆர்.எஸ்.எஸ் முன்னாள்(!) பயங்கரவாதி" பள்ளிவாசலின்மீது குண்டுவீசி வன்முறைக்கு தூண்டி விட்ட போதும் கூட, முஸ்லிம்கள் எவரும் உணர்ச்சி வசப்பட்டு விடாமல் அமைதி காத்தது மகிழ்ச்சியினைத் தருகிறது. தமிழகத்தில் மாபெரும் கலவரத்தைத் தூண்டி விட நினைத்த மதவெறி மிருகங்களை மீண்டுமொரு முறை வெட்கித் தலை குனிய வைத்திருக்கிறது. அரசும் காவல்துறையும் பாரபட்சமில்லாமல், பயங்கரவாதிகள்மீது நடவடிக்கை எடுக்கும்பட்சத்தில் நாட்டில் அமைதி நிலவும் என்பதில் ஐயமில்லை!

- சத்தியமார்க்கம்.காம்

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்