இருளில் மூழ்கும் காஸா! ~ சஹாரா தமிழ்

ads

புதன், 30 ஜூலை, 2014

இருளில் மூழ்கும் காஸா!இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காஸா பகுதியில் இருந்த ஒரே ஒரு மின் நிலையமும் சேதமடைந்ததால் தற்போது அந்நகரமே இருளில் மூழ்கும் ஆபாயத்தில் உள்ளது.

இந்நிலையில் தொடர் தாக்குதால் காஸாவில் உள்ள அனைத்து மின் நிலையமும் தகர்க்கப்பட்டு,ஒரே ஒரு மின் நிலையம் மட்டும் இருந்துள்ளது.
ஆனால் அதுவும் தற்போது குண்டு வீச்சிற்கு இரையானதால், காஸாவே இருளில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மின் நிலைய செய்தி தொடர்பாளர் கூறுகையில், இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் தரப்பில் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.மின் நிலையத்திற்கு தேவையான எரிபொருள் வைக்கப்பட்டிருந்த டாங்கர்களில் ஒன்றை முற்றிலுமாக இஸ்ரேல் படையினர் அழித்துள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு முன்னர் ஒரு நாளைக்கு 3 மணி நேரம் மட்டுமே காஸாவில் செய்யப்பட்டு வந்த மின் விநியோகமும், இப்போது இல்லாமல் மோசமான சூழல் ஏற்பட்டுள்ளது என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.


இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்