சஹாரா தமிழ்: Gaza

ads

Gaza லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Gaza லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

ஹமாஸ் VS இஸ்ரேல் ஒரு போர் வியுகம் குறித்த ஒரு பார்வை...



"ஹமாஸ் வெற்றி பெற்றுவிட்டது" :
1- இஸ்ரேலின் பென்குயுரின் விமான நிலையத்தை மூடவேண்டும் என்று ஹமாஸ் முடிவெடுத்தது. இதன் பொருட்டு இஸ்ரேலுக்கு வந்து போகும் பல நாட்டு விமான சேவைகளையும் எச்சரிக்கை செய்தது.

2- இஸ்ரேல் படை சிப்பாய்கள் போராட்டத்தில் கலந்து
கொள்ளது இருக்க தமது கால்களுக்கே சுட்டனர்.

3- இஸ்ரேல் படை சிப்பாய்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

4- நாளடைவில் இஸ்ரேலுக்கு பல டாலர்கள் நஷ்டம் ஏற்பட்டது.

5- கஸ்ஸாமின் ஏவுகணைகள் டெல் அவிவில் பல நிறுவனங்களுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தின.

6- ஐந்து மில்லியன்களை விட அதிகமான இஸ்ரேலியர்கள் முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

7- உலகமே காசாவுக்கு சார்பாக மாறியது.. சில யூதர்கள் கூட.

8- அமெரிக்கா இஸ்ரேலுடன் சேர்ந்திருந்து .அதன் அசிங்கமான முகத்தை உலகிற்கு நிரூபித்தது.

9- அறுபது ஆண்டுகள் கடந்து இஸ்ரேல் தமது கொல்லப்பட்ட படைகளுக்காக ஒப்பாரி வைத்தது .

10- கஸ்ஸாம் இரு சியோனிச இராணுவ சிப்பாய்களை கைது செய்தது.

11- கஸ்சாமின் போர் வியூகங்கள் கடும் முன்னேற்றத்தை கண்டது,

12- இஸ்ரேல் படையின் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர்.

13- இஸ்ரேலின் ஆயுதங்களுக்கு கடும் சேதம் ஏற்பட்டது.

14- தமது மானத்தை காத்துக்கொல்ல போர் நிறுத்ததுக்கு
வழிகளை இஸ்ரேல் தேடியது.

15- இஸ்ரேலுக்குள்ளேயே அதன் எதிர்ப்பாளர்களது எண்ணிக்கை அதிகரித்தது.

16- அரபு சியோனிஸ்டுகளது உண்மை முகம் உலகிற்கு தெரிந்தது.

17- அரபு சியோனிஸ்டுகளது மீடியாக்கள் உருவாக்கிய இஸ்ரேல் சார்பியக் கருத்துக்கள் தோல்வி கண்டன .

18- பலஸ்தீனுக்குள் போராடும் ஏனைய குழுக்களும்
ஹமாஸுடன் போர் நிறுத்த நிபந்தனைகளுடன் ஒத்துச் சென்றன.

19- இன்னும் கஸ்சாமின் ஏவுகணைகள் இஸ்ரேலை பதம் பார்க்கின்றன.

20- இஸ்ரேலின் அரசியல்பகுப்பு ஆய்வாளர்கள் ஹமாஸ் போராட்டத்தில் வெற்றி பெற்றுவிட்டது என்று ஏற்றுக்கொண்டனர்.

அஷ்ஷெய்க் அப்துல் ஹமீத் பிலாலி-
ஆழமான செய்திகள்
Press- imtiyas
‪#‎JournalisticviewAbusheikMuhammed‬



பிரிட்டிஷ் துணை அமைச்சர் சயீதா வார்சி காசா தாக்குதலில் பிரிட்டிஷ் அரசின் நிலைப்பாடு தொடர்பாக பதவி விலகியுள்ளார்.



பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சகத்தின் துணை அமைச்சர் , சயீதா வார்சி, காசா தாக்குதல் பிரச்சினையில் பிரிட்டிஷ் அரசின் நிலைப்பாடு தொடர்பாக பதவி விலகியுள்ளார்.

காசா பிரச்சினையில் பிரிட்டிஷ் அரசு எடுத்திருக்கும் நிலைப்பாடு " தார்மீக ரீதியில் நியாயப்படுத்த முடியாதது" என்று அவர் கூறியிருக்கிறார்.

தான் வருத்தத்துடனே பதவி விலகுவதாகவும், ஆனால்,காசா குறித்த அரசின் தற்போதைய கொள்கை, பிரிட்டனின் நற்பெயருக்கு சேதம் விளைவிப்பதாகத் தான் நம்புவதாகவும், வார்சி, பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரனுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருக்கிறார்.

வார்சி அம்மையார்தான் , பிரிட்டிஷ் அமைச்சரவை ஒன்றில் பதவிக்கு வந்த முதல் முஸ்லிம் பெண்மணியாவார்.

அவரது பதவி விலகல் குறித்து வருத்தம் தெரிவித்த பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன், தனது அரசு காசாவில் தற்போதைய நிலைமை சகித்துக்கொள்ள முடியாததாகவே இருப்பதாகவும், இரு தரப்புகளும் உடனடியாக நிபந்தனையற்ற போர் நிறுத்தத்துக்கு உடன்படவேண்டும் என்றுமே கூறிவருவதாகவும் கூறினார்.
காசாவின் மீது இஸ்ரேலியக் குண்டுத்தாக்குதல் பற்றி போதிய அளவு கடுமையாக கேமரன் கண்டனத்தைத் தெரிவிக்கவில்லை என்று எதிர்க்கட்சியினரும், அவரது கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் விமர்சித்து வருகிறார்கள் என்று பிபிசியின் அரசியல் விவகாரச் செய்தியாளர் கூறுகிறார்.

Source- BBC Tamil
#MuhammedHaris

போர் நிறுத்தம் காலையில் என்று இருக்க, இரவோடு இரவாக இஸ்ரேலிய படையினர் வாபஸ்!



போர் நிறுத்தம் ஆரம்பமாக 10 நிமிடங்களுக்கு முன்பே 25 ராக்கெட்டுகள் பல பாகங்களுக்கும் அடித்துள்ளார்கள் கஸ்ஸாம் வீர்கள்!

போர் நிறுத்தம் காலையில் என்று இருக்க, இரவோடு இரவாக இஸ்ரேலிய படையினர் வாபஸ் பெற ஆரம்பித்தார்கள் உலகின் பலம் பொருந்திய 4வது படையினர்.

மோட்டார் தாக்குதல்களும் விழ விழ அவர்களும் கொண்ட கொள்கையில் விடாப் பிடியாக வாபஸ் வாங்கி விட்டார்கள் !..
Source- Al Jazeera
Press- fairoos
‪#‎JournalisticviewAbusheikMuhammed‬

காஸா, பாலஸ்தீனத்திற்க்கு ஆதரவாக கால்பந்தாட்ட வீரர்கள் - பிரேசிலிய லீக்



காஸா, பாலஸ்தீனத்திற்க்கு ஆதரவாக கால்பந்தாட்ட வீரர்கள் - பிரேசிலிய லீக்.

Source- SHEHABNEWS
#MuhammedHaris

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்து ஈரான் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்...



ஈரானிய மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெஹ்ரானில் உள்ள எகிப்திய நலன்களை பிரிவினை முற்றுகையிட்டு எகிப்திய கட்டுப்பாட்டில் உள்ள ரஃபா எல்யை மீண்டும் திறக்குமாறு கோரியும் காசா மீதான இஸ்ரேலிய பயங்கரவாதிகளின் கொடூரமான தாக்குதல்களை கண்டித்தும் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்


Source- Press Tv
#MuhammedHaris

காசா மீது இஸ்ரேலிய பயங்கரவாதிகள் நடாத்திய தாக்குதலில் 430 குழந்தைகள் படுகொலை...



காசா மீது இஸ்ரேலிய பயங்கரவாதிகள் நடாத்திய தாக்குதலில் கிட்டத்தட்ட ஒரு மாதத்தில் 430 குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

Source- Press Tv
#MuhammedHaris

ஐஸ்கீரிம் ஃப்ரீஸர்களில் பிஞ்சு குழந்தைகள்! அவலநிலையின் உச்சக்கட்டம்



காஸாவில் பலியான குழந்தைகளின் சடலங்களை ஐஸ்கீரிம் ப்ரீஸ்ரில் பாதுகாக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

பாலஸ்தீனியர்களை ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற நோக்கில் கடந்த பல தினங்களாக இஸ்ரேல் இராணுவ படைகள் , காஸாவில் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இதில் இதுவரை 1800 பேருக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.அதில் 296 குழந்தைகள் இறந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இஸ்ரேலியப் படைகள், தாக்குதலில் பலியானவர்களை அடக்கம் செய்ய கூட இடைவெளி அளிக்காமல், தொடர்ந்து தங்களது வெறியாட்டத்தை நிகழ்த்துவதால், பலியான பிஞ்சு குழந்தைகளின் சடலங்கள் அழுகிப் போகாமல் இருக்க, அவற்றை ‘ஐஸ்கிரீம் ஃப்ரீஸர்’களில் வைத்து பாதுகாக்கப்பட்டுள்ளது.

இந்த அவல காட்சிகள் நிறைந்த புகைப்படங்களை காஸாவில் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள் வெளியிட்டுள்ளனர்.

Source- muslimummaath fb
#MuhammedHaris

ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014

இஸ்ரேல் தயாரிப்புகளை புறக்கணித்தன் விளைவு : 4 பில்லியன் நட்டம்



இஸ்ரேல் டிஃபன்ஸ் ஃபோர்ஸ் எனும் யூத தீவிரவாத இராணுவத்தின் திமிரை பாருங்கள். இப்போது அவர்களுக்கு 4 பில்லியன் நட்டமாம்.

ஆனாலும் பிரச்னை இல்லையாம், உலக முஸ்லிம் நாடுகள் இஸ்லாமிய நாடுகள் இஸ்ரேல் தயாரிப்புகளை புறக்கணித்தாலும் பிரச்னை இல்லையாம்!
அல்லாஹ் நம் ஒற்றுமையின் காரணமாக தீவரவாத இஸ்ரேலை புலம்ப விட்டு விட்டான்.

இனியும் புறக்கணிப்போம்! ஃபலஸ்தீன் வெற்றிக்கு பாடுபடுவோம்!!

Source- JameelMohamed-FB
‪#‎MohamedHaris


இன்று காலை இஸ்ரேலின் குண்டுவீச்சுக்கு பின்னர் படுகாயமடைந்த பலஸ்தினியரை ரஃபா மருத்துவமனைக்கு கொண்டு வந்த காட்சி...

Embedded image permalink

காஸாவில் இன்று காலை இஸ்ரேல் நடாத்திய கடும் குண்டுவீச்சுக்கு தாக்குதலுக்குப் பின்னர் படுகாயமடைந்த பலஸ்தினியரை ரஃபா மருத்துவமனைக்கு கொண்டு வந்த காட்சி...

Source- Aljazeera
‪#‎MohamedHaris


காஸாவின் உணர்வா (UN-RWA) பள்ளியில் இஸ்ரேல் நடாத்தியா தாக்குதல்...

Displaced Palestinian boys look at the sky at the Abu Hussien UN school in the Jabalia refugee camp in the northern Gaza Strip, August 2, 2014.

இன்று காஸாவின் உணர்வா (UN-RWA) பள்ளியில் இஸ்ரேல் நடாத்தியா தாக்குதலில்  10 குழந்தைகளும் தனியார் துறையில் 48 குழந்தைகள் மற்றும் பெண்களும் கொல்லப்பட்டனர்.

Source- Press Tv
#MohamedHaris

இன படுகொலை செய்யும் இஸ்ரேலை கண்டித்து த.மு.எ.க சங்கம் சார்பாக ஓவிய நிகழ்ச்சி...




இன படுகொலை செய்யும் இஸ்ரேலை கண்டித்து தாம்பரத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பாக ஓவியம் நிகழ்ச்சியில் பொது மக்கள் தங்களுடய கோபத்தை எழுத்து மூலமாக வெளிப்படுத்தினார்கள் மற்றும் சிறுவர்கள் கலந்து கொண்டனர்.

#MohamedHaris

பாலஸ்தீனம் மீதான இஸ்ரேல் தாக்குதலை கண்டித்து வி.சி கட்சி ஆர்ப்பாட்டம்...


சென்னை, பாலஸ்தீனம் மீதான இஸ்ரேல் தாக்குதலை கண்டித்து சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கண்டன ஆர்ப்பாட்டம்
பாலஸ்தீனம் மீதான இஸ்ரேல் ராணுவ தாக்குதலை கண்டித்து சென்னை வள்ளுவர்கோட்டம் அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சி-இஸ்லாமிய ஜனநாயக பேரவை சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளன் தலைமை தாங்கினார். பொருளாளர் மு.முகமது யூசுப், எஸ்.டி.பி.ஐ. கட்சி தலைவர் எஸ்.எம்.தெஹலான் பாகவி, சுன்னத் ஜமாத் ஐக்கியப் பேரவை தலைவர் மேலைநாசர், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தலைவர் எ.எஸ்.இஸ்மாயில் உள்பட இஸ்லாமிய அமைப்பை சேர்ந்த தலைவர்கள் முன்னிலை வகித்தனர்.

‘வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறது’
ஆர்ப்பாட்டத்தின்போது, தொல்.திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-
இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் கோர தாக்குதலில் 1500-க்கும் மேற்பட்ட அப்பாவி பாலஸ்தீன இஸ்லாமிய மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இலங்கையிலேயே லட்சக்கணக்கான அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டபோது, இலங்கை எங்களுக்கு நட்பு நாடு என்று உறவாடிய இந்திய அரசு, தற்போது இஸ்ரேலையும் நட்பு நாடு என்று கூறுவது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்று அமைந்துள்ளது.
எனவே இனியும் மத்திய அரசு வேடிக்கை பார்க்காமல், இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐ.நா.சபையை வலியுறுத்த வேண்டும்.

ஜெயலலிதாவிடம் மன்னிப்பு...
சிங்கள இனவெறி அரசு மிக அநாகரிகமான முறையில் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா பற்றி ராணுவ இணையதளத்தில் அவதூறு கருத்துக்களுடன் கேலி சித்திரம் வெளியிட்டிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.
இந்த விவகாரத்தில் ஜெயலலிதாவிடம், இலங்கை அதிபர் ராஜபக்சே வெளிப்படையான மன்னிப்பு கேட்க வேண்டும்.

இவ்வாறு தொ.திருமாவளவன் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொள்கை பரப்பு செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி, இளைஞரணி துணை செயலாளர் இரா.செல்வம், தனி செயலாளர் மடிப்பாக்கம் வெற்றி செல்வன் உள்பட ஏராளமான நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

இஸ்ரேல் நாட்டு கொடியை தீயிட்டு கொளுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

Source - Dailythanthi
#MohamedHaris

ஹரம் ஷெரீஃப் இமாம் ஷேய்க் சுரைம் அவர்கள் துணிச்சலில் பலருக்கும் பாடம்...




ஷேய்க் சுரைம் அவர்கள் துணிச்சலில் பலருக்கும் பாடம் இருக்கின்றது ...நேரடியாகவே சவூதி மன்னருக்கு கொடுக்கும் உபதேசம் ...அபாரம் .....

ஹமாஸின் மீதான விரோதம் காரணமாக காஸ்ஸாவில் இஸ்ரேல் நடத்தும் கூட்டுப்படுகொலையை ஆதரிக்கும் சியோனிஷம் பாதித்த அரபுக்கள், யூத உள்ளங்களை கொண்டவர்கள் என்று ஹரம் ஷெரீஃப் இமாம் ஸஊத் ஸுரைம் தனது ட்விட்டரில் மறைமுகமாக குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பது:
’காஸ்ஸாவில் ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் ஷஹீதாகிவிட்டார்கள். ஆனால், அவர்களின் படுகொலை முஸ்லிம் உடல்களில் ஆயிரக்கணக்கான யூத உள்ளங்கள் இருப்பது நமக்கு தெளிவுப்படுத்தியுள்ளது.

நீங்கள் ஒன்றை வெறுக்கலாம் ஆனால், அதில் அல்லாஹ் நன்மையை வைத்திருப்பான்(குர்ஆன்)

Press- Alagappan Abdul Kareem
#JournalisticviewAbusheikMuhammed

அரேபிய அரசுகள் இஸ்ரேலின் பெயரைச் சொல்லி இதுவரை கண்டிக்கவில்லை...



ஈழத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் நடந்தபோது தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி தாக்குதலைத் தடுத்து நிறுத்தவில்லை என்று அவர் மீதான கோபம் இன்றும் தொடர்ந்து கொண்டுள்ளது. மாநில முதல்வராக என்ன செய்ய இயலுமோ அதைச் செய்ததாக அவரது ஆதரவாளர்கள் கூறுவர்.

இது ஒருபுறமிருக்க, காஸா மீதான தாக்குதலைத் தடுத்து நிறுத்தும் சகல வாய்ப்புகளையும் கருணாநிதியைவிட அதிகமாகவே சவூதி அரேபிய மன்னரும் எகிப்தின் அதிபரும் பெற்றிருக்கின்றனர்.

கருணாநிதியாவது இலங்கை அரசையும் ராஜபக்சேவையும் கண்டித்து அறிக்கைகளை வெளியிட்டார். ஆனால், கத்தர் தவிர்த்த அரேபிய அரசுகள் இஸ்ரேலின் பெயரைச் சொல்லி இதுவரை கண்டிக்கவில்லை

Press- Alagappan Abdul Kareem
#JournalisticviewAbusheikMuhammed

காஸாவில் அல் அக்ஸா டீ.வி கேமரா மேன் கலிமா மொழிந்தபடி உயிர்நீக்கும் காட்சி : வீடியோ



காஸாவில் இந்த வீடியோவை எடுத்த அல் அக்ஸா டீ வி கேமரா மேன் ஸாமிஹ் அல் உர்யான் தாக்குதலில் அகப்பட்டு கலிமா மொழிந்தபடி நீதிக்கான பாதையில் உயிர்நீக்கும் காட்சி.... அல்லாஹ் அக்பர்

மீடியாவிற்கான பணிகள் ஒரு போரட்டவியல்(ஜிஹாத்) இஸ்லாம் ஒன்லைனை ஆரம்பித்த போது ஷெய்க் கர்ளாவி அவர்கள் சொன்னார்கள் ஊடகப் பணிதான் நவீன காலத்தின் ஜிஹாத் அவர் கூற்றை அல் ஜஸீரா, அல் அக்ஸா போன்ற உண்மைக்காக போராடும் மீடியாக்களும் பத்திரிக்கையாளர்களும் உண்மைப் படுத்திக் கொண்டிருக்கின்றனர்!




Source- Youtube
Press- fairoos
‪#‎JournalisticviewAbusheikMuhammed‬.

சனி, 2 ஆகஸ்ட், 2014

கல்நெஞ்சக்காரர்களையும் கண்ணீர் விட வைக்கிறது இஸ்ரேலிய அரக்கத்தனம்....



இதுவரை ஜஸ்ட் வேடிக்கை மட்டுமே பார்த்து வந்த சொரணை அற்றவர்களை எல்லாம் மனிதர்களாக மாற்றி வருகிறது இஸ்ரேலிய பயங்கரவாதம்....

கண்ணை மூடிக்கொண்ட கல்நெஞ்சக்காரர்களையும் கண்ணீர் விட வைக்கிறது இஸ்ரேலிய அரக்கத்தனம்....

இதயம் சீலிடப்பட்டவர்களை கூட... "இந்த அளவுக்கு கொடூரர்களா இந்த சிநோயிஸ்டுகள்" என்று சிந்திக்க கசிந்துருக வைக்கிறது இஸ்ரேலிய கோரதாண்டவம்.....

இப்போதுதான்... உலகில் கொஞ்சம் கொஞ்சமாக மனிதம் உள்ள மனிதர்களை பற்றியும் கூட நியூஸ் போடுகிறது உலக ஊடகங்கள்..!

இஸ்ரேலின் கொடூரத் தாக்குதலில் குழந்தைகள் அநியாயமாக உயிரிழந்த சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்தபோது... ஐ.நா. மறு சீரமைப்பு மற்றும் நிவாரண முகமையின் செய்தித் தொடர்பாளர் கிறிஸ் கின்னஸ், டிவியிலேயே கண்ணீர் விட்டு அழுதார்.

இந்த மனிதநேயத்துக்கு கு கண்டனம் தெரிவித்த இஸ்ரேல்...
இவரை உடனடியாக பதவியில் இருந்து தூக்கும் படி ஐநாவிடம் சொல்லி இருப்பதை கூட "தவறு" மெல்ல சொல்ல துணிந்து விட்டன மீடியாக்கள்..................



Source- Mohamed Ashik-Facebook
‪#Mohamedharis

காஸா மக்களுக்காக இப்படியும் போரடலாம்...வீடியோ




காஸா மக்களுக்காக இப்படியும் போரடலாம்
காஸாவுக்கு சென்று ரோக்கட் ஏந்தி தான் போராட வேண்டும் என்றில்லை.
இறைவன் உங்களுக்கென்றே ஒரு தனிதத்துவமான
திறமையை தந்திருப்பான் அதனை வைத்து போராடுங்கள்...
Source- Samaher Tiba@Facebook
‪#Mohamedharis

காஸா தென்மேற்கு ஜெனின் யபாத் கிராமத்தில் இஸ்ரேலிய தாக்குதல்



காஸா தென்மேற்கு ஜெனின் பகுதியில் உள்ள யபாத் கிராமத்தில் இஸ்ரேலிய தாக்குதலில் இருவர் காயம்.
Two injured during clashes with Israeli troops after storming
into ya'bad village, southwest of Jenin.

Source- Quds News
‪#‎JournalisticviewAbusheikMuhammed‬

நாங்கள் மட்டும் ஏன் இவ்வுலகில் வாழக்கூடாது?

நாங்கள் மட்டும் ஏன் இவ்வுலகில் வாழக்கூடாது ? என இஸ்ரேலின் தாக்குதலில் படுகாயமுற்று காசா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவன் ஒருவன் கேள்வி எழுப்பியிருக்கிறான். இக்கேள்வி உலக நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.பாலஸ் தீனத் தின் சுயாட்சி பகுதியான காசா மீது இஸ்ரேல் மொத்தமாக ஆக்கிரமிக்கும் நோக்கத்தோடு கடந்த 24 நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் இதுவரை 11450க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதனை நிறுத்த கோருவது போல் பேசும் அமெரிக்கா, இஸ்ரேலுக்கு தேவையான ஆயுதங்களையும், மக்களை அழிக்கும் குண்டுகளையும் தொடர்ந்து வழங்கி வருகிறது.


இதில் பெரும்பகுதியினர் அப்பாவி பொதுமக்கள். குறிப்பாக அதிகமான குழந்தைகள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இஸ்ரேலின் இந்த கொடூரத் தாக்குதலில் படுகாயமுற்று உயிருக்கு ஆபத்தான நிலையில் காசா மருத்துவமனையில் முகமது அலைலா என்ற 10 வயது சிறுவன் சிகிச்சை பெற்று வருகிறான். தனது உடலில் ஏற்பட்டிற்கும் குண்டு காயங்களால் வலியால் துடிக்கும் அந்த சிறுவன் தனது தாயிடம் சில கேள்விகளை எழுப்பியிருக்கிறான்.

#இன்றைய வானம்

மீண்டும் ஓர் "நில்லாடிய நிலமெங்கே.. சொல்லாடிய அவை எங்கே ...,காசா"



இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் இனப் படுகொலை வெறிக்கு பலியான யூதர்கள் ஜெர்மனியை விட்டு ஓடினார்கள் .,

அமேரிக்கா , பிரிட்டன், பிரான்சு போன்ற நாடுகள் அடைக்கலாம் தர மறுத்தன., ஆனால் யூதர்களைப் பாதுகாப்பாக கப்பலில் ஜெர்மனியில் இருந்து மீட்டன .,

அப்போது அனாதைகளாய் நின்ற யூதர்கள் அடைக்கலம் கேட்டு கெஞ்சியபோது எந்த நாடும் அடைக்கலம் கொடுக்க முன்வரவில்லை .,

பலாச்தின முஸ்லிம்கள் அடைக்கலம் கொடுத்தார்கள் ., தங்கள் உணவு ,உடை உறைவிடம் போன்றவற்றை பகிர்ந்து கொண்டார்கள் ., பின்னர் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு நாடுகள் யூதர்களை ராணுவம் அமைக்கவும் நாடு பிரிக்கவும் தூண்டின ., ஆயுதபலமும் ., இராணுவபலமும் கொடுக்கப் பட்டன ., பாலஸ்தினத்தின் இதயத்தில் உதிரத்தால் ஒரு கோடு.., பலஸ்தீன இரண்டாக பிளக்கப் பட்டு யூதர்கலுக்கு இஸ்ரேல் முஸ்லிம்களுக்கு எஞ்சிய பலஸ்தீன என உருவானது .,

அடைக்கலம் கொடுத்ததற்க்கு பெரும் இழப்பை சந்தித்த பாலஸ்தினிய முஸ்லிம்கள் இன்று உயிர் இழப்புகளையும் சந்திக்கின்றனர் .,அகதிகளாய் வந்த யூதர்கள் ஏகாதிபத்திய இனப் படுகொலைகளை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள் .,

இலங்கையைப் போல் மீண்டும் ஓர் நில்லாடிய நிலமெங்கே ???

#இன்னும் சிலர் தங்கள் மத வெறியை கொட்டி தீர்க்க மனித நேயம் தொலைத்தவர்களாய் .., இந்தப் படு கொலையை நியாயப் படுத்திக் கொண்டு ., !!!!கண்ணாடி முன் நின்று "நாம் மனிதர்கள் தானா ??"கேட்டுப் பார்க்கிறேன்.,


- உள்ளதை சொல்கிறேன் ராஜ்குமார்'

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்