நாங்கள் மட்டும் ஏன் இவ்வுலகில் வாழக்கூடாது? ~ சஹாரா தமிழ்

ads

சனி, 2 ஆகஸ்ட், 2014

நாங்கள் மட்டும் ஏன் இவ்வுலகில் வாழக்கூடாது?

நாங்கள் மட்டும் ஏன் இவ்வுலகில் வாழக்கூடாது ? என இஸ்ரேலின் தாக்குதலில் படுகாயமுற்று காசா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவன் ஒருவன் கேள்வி எழுப்பியிருக்கிறான். இக்கேள்வி உலக நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.பாலஸ் தீனத் தின் சுயாட்சி பகுதியான காசா மீது இஸ்ரேல் மொத்தமாக ஆக்கிரமிக்கும் நோக்கத்தோடு கடந்த 24 நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் இதுவரை 11450க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதனை நிறுத்த கோருவது போல் பேசும் அமெரிக்கா, இஸ்ரேலுக்கு தேவையான ஆயுதங்களையும், மக்களை அழிக்கும் குண்டுகளையும் தொடர்ந்து வழங்கி வருகிறது.


இதில் பெரும்பகுதியினர் அப்பாவி பொதுமக்கள். குறிப்பாக அதிகமான குழந்தைகள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இஸ்ரேலின் இந்த கொடூரத் தாக்குதலில் படுகாயமுற்று உயிருக்கு ஆபத்தான நிலையில் காசா மருத்துவமனையில் முகமது அலைலா என்ற 10 வயது சிறுவன் சிகிச்சை பெற்று வருகிறான். தனது உடலில் ஏற்பட்டிற்கும் குண்டு காயங்களால் வலியால் துடிக்கும் அந்த சிறுவன் தனது தாயிடம் சில கேள்விகளை எழுப்பியிருக்கிறான்.

#இன்றைய வானம்

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்