சஹாரா தமிழ்: பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்

ads

பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 11 ஜூன், 2015

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அவசியம்: விடுதலை சிறுத்தைகள் நடத்திய கருத்தரங்கில் வலியுறுத்தல்...

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில், `தமிழகத்தில் கூட்டணி ஆட்சி - ஆட்சியதிகாரப் பகிர்வுக்கான அரசியல் கருத்தரங்கம்’ அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் சென்னையில் நேற்று நடைபெற்றது. இக்கருத்தரங்கில் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், தமாகா சார்பில் பீட்டர் அல்போன்ஸ், மனிதநேய மக்கள் கட்சியைச் சேர்ந்த ஜவாஹிருல்லா, மதிமுகவைச் சேர்ந்த மாசிலாமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். படம்: ம.பிரபு
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில், `தமிழகத்தில் கூட்டணி ஆட்சி - ஆட்சியதிகாரப் பகிர்வுக்கான அரசியல் கருத்தரங்கம்’ அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் சென்னையில் நேற்று நடைபெற்றது. இக்கருத்தரங்கில் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், தமாகா சார்பில் பீட்டர் அல்போன்ஸ், மனிதநேய மக்கள் கட்சியைச் சேர்ந்த ஜவாஹிருல்லா, மதிமுகவைச் சேர்ந்த மாசிலாமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 



இன்றைய சூழலில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அவசியம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி ஏற்பாடு செய்த கருத்தரங்கில் அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர்.

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி முறை அமல்படுத்தப்பட வேண்டும் என்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தி வருகிறார். அதன் அடிப்படையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் `தமிழகத்தில் கூட்டணி ஆட்சி’ என்னும் கருத்தரங்கு சென்னையில் நேற்று நடத்தப் பட்டது. கருத்தரங்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ரா.முத்தரசன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, தமிழ் மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கருத்தரங்கில் பேசிய அரசியல் கட்சி தலைவர்களும் கூட்டணி ஆட்சி கோட்பாட்டை வலியுறுத்தி பேசினார்கள்.

மனிதேய மக்கள் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் M.H.ஜவாஹிருல்லாஹ் எம்.எல்ஏ. பேசியதாவது:

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக திமுக, சுதந்திரா கட்சி, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளின் கூட்டணி உருவாக காயிதே மில்லத் காரணமாக இருந்தார். அப்போது கூட்டணி ஆட்சி என்ற முறையில்தான் அந்த கூட்டணி உருவாக்கப்பட்டது. ஆனால், தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்ற திமுக, கூட்டணி ஆட்சிக்கு மறுத்துவிட்டது. காயிதே மில்லத் மட்டும் அப்போது வலியுறுத்திக் கேட்டிருந்தால் அப்போதே கூட்டணி ஆட்சி அமைந்திருக்கும்.

திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுக்கும் தேர்தலில் கூட்டணி என்றால் இனிக்கிறது. ஆனால், கூட்டணி ஆட்சி என்றால் கசக்கிறது. கடந்த மக்களவைத் தேர்தலில் திமுக டெபாசிட் பெறுவதற்கே விடுதலை சிறுத்தைகளும், மமகவும் தான் காரணமாக இருந்தன. ஆனால், நாங்கள் போட்டியிட்ட தொகுதிகளில் திமுகவினர் சரியாக ஒத்துழைக்கவில்லை. அனைத்து விளிம்பு நிலை சமுதாயத்தினர் மேம்பாடு அடைய கூட்டணி ஆட்சி அவசியம். இவ்வாறு ஜவாஹிருல்லா கூறினார்.

மதிமுக பொருளாளர் மாசிலாமணி பேசியதாவது:

1960-களில் “மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி” என்ற கோட்பாட்டினை பேரறிஞர் அண்ணா வலியுறுத்தினார். ஏனெனில் அப்போது தமிழகத்தில் காங்கிரஸ், திமுக, பொதுவுடைமை கட்சிகள் மட்டுமே இருந்தன. எனவே, அண்ணா அப்படி வலியுறுத்தினார். ஆனால், இப்போது நிலைமை வேறு. அண்ணா மட்டும் இப்போது இருந்திருந்தால் “மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் கூட்டணி ஆட்சி” என்ற முழக்கத்தை முன்வைத்திருப்பார். இன்றைய சூழலில் கூட்டணி ஆட்சிதான் மிகவும் அவசியமானது. இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ் மாநில காங்கிரஸின் மூத்த துணைத்தலைவர் பீட்டர் அல்போன்ஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் ரா.முத்தரசன் ஆகியோர் கூட்டணி ஆட்சியை வலியுறுத்தி உரையாற்றினர். அவர்களைத் தொடர்ந்து திருமாவளவன் கூட்டணி ஆட்சி குறித்து தலைமை உரையாற்றினார்.

வியாழன், 16 ஏப்ரல், 2015

ஆந்திராவில் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வு மதுரை மக்கள் கண்காணிப்பகத்தின் உண்மை அறியும் குழு...


ஏப்-16.ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வு குறித்து ஆய்வுச் செய்ய மதுரை மக்கள் கண்காணிப்பகம் முன்முயற்ச்சியில் ஒரு உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டுள்ளது.

மும்பை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எச் சுரேஷ் தலைமையிலான இக்குழுவில் முன்னாள் டிஜிபி ராம் மோகன் தேசிய மனித உரிமை ஆணையத்தின் முன்னாள் உறுப்பினர் சத்தியபுரதாப் பால், மனிதநேய மக்கள் கட்சியின் எம்.எல்.ஏ பேராசிரியர் ஜவாஹிருல்லா, மக்கள் கண்காணிப்பகத்தின் இயக்குனர் ஹென்றி டிபேன், தடய அறிவியல் நிபுனர் மரு. சேவியர் ஆகியோர் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர். 



இக்குழு கடந்த 14-04-2015 அன்று காலை சென்னையிலிருந்து புறப்பட்டு முதலில் நகரி காவல் நிலையத்தில் விசாரணை மேற் கொண்டனர். பிறகு சம்பவம் நடைபெற்ற வனப்பகுதிக்குச் சென்றனர். ஆனால் வனப்பகுதிக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. தொடர்ந்து குழு ஆய்வு மேற்கொண்டு வருகின்றது.

சனி, 4 ஏப்ரல், 2015

விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் விருதுகள் அறிவிப்பு...

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விருதுகளை அக் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று அறிவித்தார்.

2015-ம் ஆண்டுக்கான விருதைப் பெறுபவர்களின் பெயர்கள் அறிவிக் கப்பட்டுள்ளது. அவை வருமாறு:

அம்பேத்கர் சுடர் எழுத்தாளர் அருந்ததி ராய், அயோத்திதாசர் ஆதவன் பேராசிரியர் க.நெடுஞ்செழியன், பெரியார் ஒளி கோவை கு.ராமகிருட்டிணன், காமராசர் கதிர் ஜி.கே.மூப்பனார் ( மறைவுக்குப் பின்னர் வழங்கும் முறையில்), காயிதேமில்லத் பிறை பேராசிரியர் ஜவாஹிருல்லா, செம்மொழி ஞாயிறு முனைவர் அவ்வை நடராசன்

விருது பெறுபவர்களுக்கு பாராட்டுப் பட்டயத்துடன், ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். விருது வழங்கும் விழா சென்னையில் மே 2 -ம் தேதி நடைபெறவுள்ளது.

புதன், 30 ஜூலை, 2014

சட்டமன்றத்தில் மின்னணு கழிவுகள் குறித்து ஜவாஹிருல்லா MLA கேள்வியும் அமைச்சரின் பதிலும்...



முனைவர்.எம்.எச். ஜவாஹிருல்லா:  மின்னணு கழிவுகள் குறித்து எனது கேள்வியும் அமைச்சரின் பதிலும் துக்ளக் வார இதழின் ஆதங்கமும்

கடந்த ஜுலை 25 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது மின்னணுக் கழிவுகள் குறித்து நான் எழுப்பிய கேள்வியும் அதற்கு சுற்றுச் சூழல் அமைச்சர் அளித்த பதிலையும் இங்கே பகிர்ந்துக் கொள்கிறேன்.

பேராபாத்துகளை தாங்கி நிற்கும் மின்னணுக் கழிவுகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு இல்லாத நிலையில் சட்டமன்றத்தில் நான் எழுப்பிய இந்த கேள்வி குறித்து எந்த ஊடகமும் செய்தி வெளியிடவில்லை. இது குறித்து இந்த வாரம் துக்ளக் இதழில் (6.8.2014) தனது ஆதங்கத்தை வெளிப்பபடுத்தியுள்ளது.

துக்ளக் இதழில் சட்டமன்ற நிகழ்வுகள் குறித்து விமர்சனம் செய்யும் 'தோஸ்த்' (மூத்த பத்திரிகையாளர் ரமேஷ்):
'பொதுவாகவே, சபையில் அமளியில் ஈடுபட்டால், மீடியாவில் கிடைக்கிற விளம்பரம், ஆக்கபூர்வமாகப் பேசுகிறவர்களுக்குக் கிடைப்பதில்லை என்பது தொடர்ந்து நிலவும் ஒரு குறை. உதாரணமாக, மின்னணுப் பொருட்களின் கழிவால் (e waste) ஏற்படும் பாதிப்புகள் குறித்து, கேள்வி நேரத்தில் ஜவாஹிருல்லாஹ் எழுப்பிய வினா, முக்கியமான ஒரு பிரச்னை சம்பந்தப்பட்டது. செய்திகளில் இப்படிப்பட்ட விஷயங்கள் முக்கியத்துவம் பெறுவதில்லை' என்று குறிப்பிட்டுள்ளார்.

இனி இது தொடர்பாக எனது கேள்விகளும் அமைச்சரின் பதில்களும்
மின்னணுக் கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் செயற்குறிப்பு அரசிடம் உள்ளதா?

மாண்புமிகு திரு. என்.டி. வெங்கடாச்சலம், சுற்றுச் சூழல் துறை அமைச்சர்:
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மத்திய அரசினுடைய சுற்றுச்சூழல் வனத் துறை அறிவிக்கையின்படி மின்னணுக் கழிவு (மேலாண்மை மற்றும் கையாளுதல்) விதிகள் 2011ல் வெளியிடப்பட்டு, 2012 ஆம் ஆண்டு மே 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தால் வெளியிடப்பட்ட வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் 12-9-2013ல் உரிய ஆணைகள் வெளியிடப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் மூலமாக மாண்புமிகு உறுப்பினரு க்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முனைவர்.எம்.எச். ஜவாஹிருல்லா: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,
கணினிகள், மடிக்கணிளிகள், இன்னிசைக் கருவிகள், செல்போன்கள், கேமராக்கள், பென்டிரைவ் போன்றவை மின்னணு கழிவாக ஈவேஸ்ட் ஆக கருதப்படுகின்றன. மும்பை, புதுடெல்லி, பெங்களுருக்கு அடுத்ததாக சென்னையிலே ஆண்டொன்றுக்கு 47000 டன் மின்னணு கழிவுகள் கிடைப்பதாக ASSOCHAM(Associated Chamber of Commerce and Industries ) அறிவித்திருக்கிறது. இதில் டிவிக்கள், கணினிகள் மற்றும் மொபைல் போன்கள் 26183 டன்கள் சென்னையில் கழிவுகளாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தக் கழிவுகளிலே நச்சுத் தன்மையுள்ள காரியம், பாதரசம், குரோமியம், போன்ற உலோகங்கள் இருக்கின்றன. இந்த உலோகங்கள் கழிவாக ஆகும்போது மனிதர்களுக்குப் புற்று நோய் நரம்புத் தளர்ச்சி, கண் பார்வைக் குறைபாடு போன்ற பல்வேறு உபாதைகள் ஏற்படுகின்றன. விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. மண்னையும், நீரையும், காற்றையும் மாசுபடச் செய்கிறது. மாண்புமிகு அமைச்சர் குறிப்பிட்டது போல E-Waste (Management and Handling ) Rules 2011 படி இந்த மின்னணு பொருட்களைத் தயாரிக்கக் கூடியவர்களுக்கு உருவாக்கப்பட்ட தயாரிப்பாளர் பொறுப்புடைமை அதாவது Extended Producer Responsibility என்று ஒன்று இருக்கிறது. இந்த விதியின்படி இந்த மின்னணு பொருட்களைத் தயாரிக்கக்கூடிய தயாரிப்பாளர்கள் அது பயன்பாடு முடிவடைந்தபிறகு அதற்கானCollection Centre சேகரிப்பு நிறுவனம் அமைக்கவேண்டும்.

அதேபோன்று, dismantling அதை பிரிப்பதற்கும் மற்றும் recycle மறுசூழற்ச்சி செய்வதற்கும் அந்த விதிகளிலே இடம் இருக்கிறது. அதை நடைமுறைப்படுத் துவதற்கு தமிழக அரசு எத்தகைய நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது என்று வினவுகின்றேன்.

மாண்புமிகு திரு. என்.டி. வெங்கடாச்சலம், சுற்றுச் சூழல் துறை அமைச்சர்

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,E-Waste என்று சொல்லக்கூடிய மின்ணணு கழிவில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படாமல் இருக்கும்பொருட்டு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடைய தலைமையிலான தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், தொழிற் சாலைகளுக்கு மின்னணு கழிவுகளை சேகரித்து பிரித்தெடுப்பதற்காக, மின்னணு கழிவுகள் மேலாண்மை மற்றும் கையாளுதல் விதிகள் 2011ன் கீழ் உரிய அனுமதி வழங்கிவருகிறது.

இதுவரை மேற்கண்ட விதியின் கீழ் 16 தொழிற்சாலைகளுக்கு மின்னணு கழிவு உதிரிபாகங்களை தனித்தனியாக பிரித்தெடுத்து மறு சுழற்சி செய்யும் தொழிற்சாலைகளுக்கு அனுப்புவதற்கும், அங்கீகாரம் மற்றும் பதிவுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருக்கிறது.

அவற்றில் தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்பத்துர் அருகிலே சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள திருவாளர் TES-AMM (India) Private Limited என்ற தனியார் நிறுவனம் முறையான அனுமதி பெற்று மின்னணு கழிவுகளை மறுசுழற்சி செய்து வருகிறது என்பதை மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். மின்னணு கழிவுகளை பொதுமக்களிடம் மற்றும் நிறுவனங்களிடமிருந்து சேகரித்து மறுசுழற்சி நிலையங்கள் மற்றும் பிரித்தெடுக்கும் தொழிற்சாலைகளுக்கு அனுப்பிவைக்கும் பொருட்டு 7 சேகரிக்கும் மையங்களுக்கு அரசு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

முனைவர்.எம்.எச். ஜவாஹிருல்லா: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு அமைச்சர் அவர்களின் விளக்கத்திற்கு நன்றி ஒவ்வொரு மாநகராட்சி, நகராட்சி பகுதிகளிலே, ஒவ்வொரு வார்டிலும் இதுபோன்ற மின்னணு கழிவுகளை சேகரிப்பதற்காக வேண்டி சுற்றுச்சூழல் துறை உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தி கண்டிப்பாக நடைமுறைப்படுத்துமா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. என்.டி. வெங்கடாச்சலம், சுற்றுச் சூழல் துறை அமைச்சர் மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, உள்ளாட்சித் துறையின் மூலமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளிலே குப்பைகளை பிரித்தெடுக்கும்போது அந்தக் குப்பையெல்லாம் பிளாஸ்டிக் கழிவுகளை தனியாகவும் மின்னணுக் கழிவுகளை தனியாகவும், பிரித்தெடுக்கின்ற வகையிலே அரசு உள்ளாட்சித் துறையின் மூலம் உள்ளாட்சிகளுக்கு பின் என்று சொல்லக்கூடிய தனித்தனிப் பெட்டிகளை வழங்கும் வகையில் பேரூராட்சி பகுதிகளுக்கு நிதியை ஒதுக்கீடு செய்து, அந்தத் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகின்றது என்பதை மாண்புமிகு உறுப்பினருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

வெள்ளி, 19 ஜூலை, 2013

இலங்கை சிறையில் உள்ள 11 தமிழர்களை இந்தியாவிற்கு கொண்டு வர தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: மமக கோரிக்கை















மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை

  2010 ஆம் ஆண்டு இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே தண்டிக்கப்பட்ட கைதிகளை பரிமாற்றம் செய்துக் கொள்ளும் உடன்பாடு கையொப்பமாகியது. இந்த உடன்பாட்டின்படி இந்திய சிறைகளில் உள்ள இலங்கையைச் சேர்ந்த தண்டனைப் பெற்ற கைதிகள் இலங்கைக்கு அனுப்பப்பட்டு எஞ்சிய தண்டனைக் காலத்தை அங்கு கழிப்பதற்கும் இதே போல் இலங்கை சிறையில் உள்ள தண்டனைப் பெற்ற இந்தியக் கைதிகள் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டு நம் நாட்டு சிறையில் எஞ்சிய தண்டனைக் காலத்தை கழிப்பதற்கும் வழிவகை செய்யப்பட்டது.

இந்த உடன்பாட்டின்  அடிப்படையில் கடந்த மார்ச் 2013ல்  இலங்கை சிறையில் இருந்த 20 இந்தியக் கைதிகள் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டனர். இவர்களைத் தவிர இன்னும் 11 தமிழக கைதிகள் இன்னும் இலங்கையில் உள்ள வெளிகடா சிறையில் உள்ளனர்.

  உடன்பாட்டின் படி இவர்களை இந்தியா அனுப்புவதற்கான நடைமுறைகளை இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகமும் தமிழக அரசின் உள்துறை இலாகாவும் ஒருங்கிணைந்து செயல்படுத்த வேண்டும். இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் கைதிகளை அடையாளம் காண்பது  அவர்களை இந்திய அனுப்புவதற்கான பயண ஏற்பாடுகளை செய்வது உள்ளிட்ட நடைமுறைகளை நிறைவு செய்துவிட்டது.
ஆனால் தமிழக அரசின் உள்துறையில் இவர்கள் தொடர்பான கோப்புகள் கடந்த 3 மாதங்களாக நிலுவையில் உள்ளதால் இந்த 11 தமிழக கைதிகளும் நாட்டிற்கு திரும்ப வர இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே தமிழக அரசு உடனடியாக இதனை கவனத்தில் கொண்டு தகுந்த நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு உடனடியாக இந்த 11 தமிழர்களும் நாட்டிற்கு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்தக் கைதிகளில் அதிகமானோர் 60 வயதை தாண்டிய நோயாளிகளாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்புடன்
எம் எச் ஜவஹிருல்லாஹ்

வெள்ளி, 10 மே, 2013

வெளிநாட்டிலே வாழக்கூடிய தொழிலாளர்களுக்கென தமிழ்நாட்டிலே ஒரு அமைச்சகம் அமைக்கப்பட வேண்டும்: சட்டமன்றத்தில் மமக கோரிக்கை


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhnA27ZnYXWSukuo5mPetN0pMwfSOuwKFZSilXsAQdgNAGlQiwuYNOOwhB_C8azRn32wCcHLaZXixIjnqnbN1gOPS2rjdd6ns8WvoQkfX8nCnKnxSR7bmOwUzYV3Hbx7Gy-B1v5w5SAMlU/s1600/ramnad-jawahirullah.jpg

9.05.2013 அன்று தமிழ்நாடு சட்டபேரவை கூட்டத்தொடர் தொழிலாளர் நலத்துறை மானியக் கோரிக்கையில் பேரா எம் எச் ஜவாஹிருல்லா அவர்களில் உரை:

அதிமுக அரசு வெளிநாட்டிலே வாழக்கூடிய தமிழர்களுடைய பல்வேறு பிரச்சினைகளை எல்லாம் எடுத்துக்கொண்டு, அந்தப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக நல்ல ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருவது பாராட்டுக்குரியது. அதேநேரத்தில் மிக முக்கியமாக நாம் கவனம் செலுத்த வேண்டிய பிரச்சினை அயல்நாட்டிலே வாழக்கூடிய, அயல்நாட்டிலே வாழக்கூடிய என்று சொல்வதைவிட, அயல் நாட்டிலே பணியாற்றிக் கொண்டிருக்கக்கூடிய தமிழகத் தொழிலாளர்களுடைய பிரச்சினை பற்றி இந்த அரசு நிச்சயமாக, சிறப்பான நடவடிக்கைகளை எடுக்கும் என்ற நம்பிக்கையுடன் சில கருத்துகளை என்னுடைய ஆலோசனைகளாக நான் எடுத்துரைக்க விரும்புகின்றேன்.

 2010-ல் மத்திய அரசாங்கத்தினுடைய வெளிநாடு இந்திய விவகாரத்திற்கான அமைச்சகத்தில் இணைந்திருக்கக்கூடிய Research Unit on Inter National Migration வெளிநாட்டிற்குச் செல்லக்கூடியவர்கள் பற்றிய ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. பேரா. எஸ். இருதயராஜன் என்பர் இந்த ஆய்வை மேற்கொண்டார். அந்த ஆய்விலே, உண்மையிலே நான் வியக்ககூடிய ஒரு புள்ளிவிவரம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இந்தியாவிலே இருக்கக்கூடிய பல்வேறு மாநிலங்களிலிருந்து வெளிநாட்டிலே பணியாற்றக்கூடிய தொழிலாளர்கள் தங்களுடைய மாநிலத்திற்கு அனுப்பக்கூடிய தொகை எவ்வளவு என்பதை கணக்கிட்டிருக்கின்றார்கள், அதிலே முதலாவதாக வருவது கேரள மாநிலம், 42,922 கோடி ரூபாய் கேரளாவைச் சேர்ந்த தொழிலாளர்கள் இந்த மாநிலத்திற்க அனுப்புகிறார்கள். அதற்கடுத்த நிலையிலே இருப்பது இந்தியாவில் இருக்கக்கூடிய மிகப்பெரிய மாநிலங்கள் இல்லை. கேரளாவிற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்தான் ரூ. 41,400 கோடியை செலுத்தியிருக்கின்றார்கள். மூன்றாவது இடத்திலே ஆந்திரா மாநிலம் 28,550 கோடி எனவே வெளிநாட்டில் பணியாற்றக்கூடிய தமிழர்களின் நலனை பேணி பாதுகாப்பதிலே நிச்சயமாக நாம் கூடுதல் அக்கறை செலுத்துவதற்குக் கடமைப்பட்டிருக்கின்றோம்.

 இதிலே என்ன பிரச்சினை என்றால் அதிகாரப்பூர்வாமாக தமிழ்நாட்டிலிருந்து வெளிநாட்டிற்கு சென்று வேலையில அமர்ந்திருக்கக்கூடிய தொழிலாளர்கள் எத்தகை பேர் என்ற புள்ளிவிவரம் இருக்கின்றதா? என்றால் இல்லை, இங்கிருந்து வெளிநாட்டிற்கு வேலைவாய்ப்பிற்காக, தொழிலாளர்களாக விசா பெற்று செல்லக்கூடியவர்களுடைய புள்ளிவிவரத்தை கணக்கிடக்கூடிய பணியை தமிழக அரசு செய்ய வேண்டும். அதுவும் குறிப்பாக வளைகுடா செல்லக்கூடிய தமிழர்கள் தங்களின் விசா, பணிக்காலம், வேலை செய்ய போகும் நிறுவனம், ஊதியம் மற்றும் அடிப்படை வசதிகள் பற்றிய முழு தகவல்களையும் முதலில் தமிழக அரசு அளித்து அதை துôதரகம் பரிசோதித்தப் பிறகுதான் இவர்கள் நாட்டைவிட்டே வெளியே செல்லவே அனுமதிக்க வேண்டும். ஏனென்றால், இன்றைக்கு அரசு நாடுகளாக இருக்கட்டும் அல்லது மலேசியவாக இருக்கட்டும். தாங்கள் கடன் பெற்று, பல்வேறு சுமைகளைப் பெற்று விசா எடுத்துச் சென்று, அங்கே மிக கொத்தடிமைகளாக நடத்தப்பட்டு, மிகப் பெரிய துயரங்களைப் படக்கூடிய தமிழர்கள் இருக்கின்றார்கள். அவர்களுடைய நலன்களை காப்பாற்றுவது நிச்சயமாக நம்முடைய அரசாங்கத்தின் கடமையாக இருக்கின்றது. இந்த விஷயத்திலும் அரசு கவனம் செலுத்த வேண்டும்.

அதேபோல், தொழிலாளர் நலத்துறை அமைச்சகத்தின் சார்பாக மிகப் பெரிய விழிப்புணர்வை நடத்த வேண்டும். வெளிநாட்டிலே உள்ள தமிழர்கள் வேலைக்குச் செல்லும்போது அங்குள்ள இடர்பாடுகள் என்ன? அங்கே அவர்கள் நடந்துக்கொள்ளக்கூடிய முறைகள் என்ன என்பதைப் பற்றி விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். இன்று அரபு நாடுகளுக்கும், சில தூர கிழக்கு நாடுகளுக்கும் செல்லக்கூடிய தொழிலாளர்கள் துயரங்களிலே மாட்டிக் கொள்ளும்போது அவர்களுக்கு அங்கேயிருக்கக் கூடிய நம்முடைய 100க்கு 90 சதவீதம் நம்முடைய தமிழகத் தொழிலாளர்களுக்கு அங்கேயிருக்கக்கூடிய வெளிநாட்டு தூதரங்கள் சரியான முறையிலே உதவிகளை செய்வதில்லை. அமைப்புச்சாரா அமைப்புகள், அரசு சாரா அமைப்புகள் நம்முடைய தமிழக அமைப்புகள் எங்களுடைய தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் உட்பட அவர்களுடைய துயரங்களை நீக்குவதற்கு நாங்கள் ஏதாவது பணிகளைச் செய்கின்றோம். இதற்குப் பதிலாக இங்கே ஒரு Distress Cell அதாவது அவர்கள் துயரத்தில் இருக்கும்போது இமெயில் வழியாகவோ அல்லது தொலைபேசி வழியாகவோ தங்களுடைய தகவல்களைக் கொடுத்து உடனே நம்முடைய தமிழக அரசு அதிகாரிகள் அது தொடர்பாக உரிய நடவடிக்கைகளை எடுத்து அப்படி வெளிநாட்டிலே வாழக்கூடிய தமிழகத் தொழிலாளர்களைக் காப்பாற்றக்கூடிய பணியைச் செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

இப்போது சவூதி அரேபியாவிலே ஏராளமான, இலட்சக்கணக்கான இந்தியத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். அதுவும் கேரளாவிற்கு அடுத்த நிலையிலே இருக்கக்கூடியவர்கள் நம்முடைய தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள்தான். அங்கே அந்த நாட்டு அரசாங்கம், அந்த நாட்டிலே இருக்கக் கூடியவர்களுக்கு அதிகமான வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டுமென்பதற்காக நிதாகத் எனற ஒரு திட்டத்தை கொண்டுவந்து அதன்மூலமாக நம்முடைய இந்திய நாட்டைச் சார்ந்த ஏராளமானவர்கள் வேலைவாய்ப்பை இழந்து நாடு திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கின்றது. அவர்களுடைய மறுவாழ்விற்காகவும் இந்த அரசு திட்டத்தைத் தீட்டிச் செயல்படுத்த வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

2011-ல் தமிழக அரசு தமிழ்நாடு அயல்நாடுவாழ் தமிழர்கள் நல்வாழ்வுச் சட்டம் என்ற ஒரு சட்டத்தை இயற்றியது. தமிழ்நாட்டிற்கு வெறியே பிற மாநிலங்களிலே வாழக்கூடிய பிற மாநிலங்களிலே பணியாற்றக்கூடிய தொழிலாளர்களுக்கும், அதேபோல, இந்தியக் கடல் எல்லைக்கும் அப்பால் வெளிநாடுகளில் வாழக்கூடிய தமிழ்நாட்டுத் தொழிலாளர்களுக்குரிய எல்லா நலன்களையும் பாதுகாக்கக்கூடிய வகையிலே இந்தச் சட்டம் உருவாக்கப்பட்டது. அந்தச் சட்டத்தினுடைய பிரிவு 10 லே தமிழ்நாடு அயல் நாட்டுவாழ் தமிழர்களுக்கான நல வாரியம் ஒன்று அமைக்கப்படும் என்று குறிபிடப்பட்டிருக்கின்றது. அந்த நல வாரியத்தை விரைவிலே இந்த அரசு அமைப்பதற்கான சட்டங்களை வகுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

ஒரு சில நேரங்களிலே அயல்நாடுகளில் பணியாற்றும்போது அவர்கள் ஏதாவது தண்டனை பெற்றிருப்பார்கள், அதற்குபிறகு அவர்களை நாட்டிற்குத் திருப்பி அனுப்புவார்கள், வழக்கமாக அவர்களுக்கு டிக்கெட்டை மும்பை வரைதான் கொடுக்கிறார்கள். மும்பைக்கு இரவிலே வந்து இறங்கிவிட்டு, தாயகத்திற்கு வருவதற்குக் கையிலே காசில்லாமல் துயரப்படக்கூடிய தமிழகத் தொழிலாளர்களும் இருக்கின்றார்கள், எனவே கேரளாவில் வெளிநாட்டிலே வாழக்கூடிய அந்த மாநிலத்தவர்களுக்கென தனியாக ஒரு அமைச்சகம் இருக்கின்றது. முழுக்க முழுக்க நான் சொன்ன அத்தனைப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணக்கூடிய வகையிலே அந்த அமைச்சகம் செயல்படுகிறது. எனவே வெளிநாட்டிலே வாழக்கூடிய நம்முடைய தமிழகத் தொழிலாளர்களுக்கென தமிழ்நாட்டிலே ஒரு அமைச்சகம் அமைக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

வியாழன், 28 மார்ச், 2013

கல்பாக்கத்தில் ஜனநாயக வழியில் போராடிய தமுமுக, மதிமுக தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும் : எம்.எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ

https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcRxm2qADHa11OMP668ipPha2L7gxQASw-0_WBvddp3T40F8zxOOLw 

மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. அவர்கள் வெளியிடும் பத்திரிகை அறிக்கை:

* கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம், மெய்யூர் பகுதிக்கு 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும்.

* கல்பாக்கத்தைச் சுற்றியுள்ள மக்களுக்கு இடஒதுக்கீடு அடிப்படையில் அணுமின் நிலையத்தில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.

* ஏற்கனவே இங்கு இயங்கும் அணுஉலைகள் தவிர புதிய அணுஉலைகள் அமைக்கக் கூடாது, கதிர்வீச்சு தன்மையை அறியவும், கதிர்வீச்சில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கவும் அனைத்து வசதிகளும் கொண்ட பல்நோக்கு மருத்துவமனை ஒன்றை கல்பாக்கம் அருகில் அமைக்க வேண்டும்.

* நாட்டில் இயங்கும் எந்த அணுஉலைகளின் கழிவுகளையும் கடல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொட்டக்கூடாது.

* அணுசக்தி துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் சுற்றுப்புற கிராம மக்களின் குழந்தைகளுக்கு இடஒதுக்கீடு அடிப்படையில் இடம் ஒதுக்க வேண்டும்


- ஆகிய ஐந்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கல்பாக்கத்தில் அறவழியில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இன்று இதே கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த போராட்டக் குழுவினர் அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் அனுமதி தரப்படவில்லை. இருப்பினும் போராட்டக் குழுவினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முற்பட்டுள்ளனர்.

இந்நிலையில் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்ட 500 பேரை காவல்துறையினர் கைது செய்து, 15 நாள் சிறைக் காவலில் அடைத்துள்ளனர். அறவழியில் போராட்டம் நடத்தியவர்களைக் காவல்துறை கைது செய்ததை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

சமீபத்தில் சட்டப்பேரவையில், கெயில் நிறுவனம் விவசாய நிலங்களில் குழாய் பதிப்பது தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்துப் பேசிய தமிழக முதல்வர் அவர்கள், மக்களுக்காகவே திட்டம், திட்டத்திற்காக மக்கள் அல்ல என்று மிகத்தெளிவாகக் குறிப்பிட்டார். இதே அடிப்படையில் தான் கல்பாக்கம் பகுதி மக்கள் தங்கள் வாழ்வுரிமைக்காகப் போராடி வருகிறார்கள். அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு தமிழக முதலமைச்சர் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கல்பாக்கம் போராட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனே விடுதலை செய்ய உத்தரவிட வேண்டுமென தமிழக முதல்வரைக் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா

சனி, 2 மார்ச், 2013

இலங்கை துணைத் தூதரகம் முன் கருப்புக் கொடி போராட்டம்: மக்கள் நல்வாழ்வு இயக்கம் அறிவிப்பு: மமக ஆதரவு

https://lh4.googleusercontent.com/-GWySVLFJ3nc/UTHQSuFitbI/AAAAAAAAUFg/qPGufEp8RQI/s640/2013-03-02

மக்கள் நல்வாழ்வு இயக்கத்தின் சார்பாக சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் இலங்கை அரசுக்கு எதிராக ஜெனிவாவில் நடைபெற்றவுள்ள கூட்டத்தில் கண்டன தீர்மானம் கொண்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் அதற்கு ஆதரவாக ஜெனிவாவில் எதிர்வரும் 4.03.2013 அன்று புலம்பெயர்ந்த தமிழர்கள் சார்பாக ஆர்பாட்டம் நடைபெறவுள்ளதாகவும், அந்நாளை தமிழகத்தில் ஈழத்தோழமை நாள் என அறிவித்து தமிழகம் முழுவதும் கருப்புக்கொடி ஆர்பாட்டம் நடைபெறவுள்ளதாகவும், அதேநாளில் சென்னையில் இலங்கை துணைத் துôதரகம் முன் கருப்புக்கொடி போராட்டம் நடைப்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதில் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ, நல்லக்கண்ணு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பழ நெடுமாறன், கொளத்துôர் மணி, பண்ருட்டி வேல்முருகன் கவிஞர் புலமைப்பித்தன் மற்றும் இயக்குநர் புகழேந்தி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

வியாழன், 21 பிப்ரவரி, 2013

பாலகன் பாலச்சந்திரன் படுகொலை ஆவணம் இலங்கை அரசின் போர்க்குற்றத்தை மேலும் வலுப்படுத்துகிறது!‏

https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcQbZJU10qNFKRMlhzbTwVsG6ui06e-5UAzzS19FyoMS6PrKAhKe
பாலகன் பாலச்சந்திரன் படுகொலை ஆவணம் இலங்கை அரசின் போர்க்குற்றத்தை மேலும் வலுப்படுத்துகிறது!

மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் டாக்டர் எம்.எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் பத்திரிகை அறிக்கை:

2009ஆம் ஆண்டு இலங்கையில் நிகழ்ந்த போர்க் குற்றங்கள் மூலம் ஏராளமான தமிழர்களைப் படுகொலை செய்தது. முல்லிவாய்க்காலும் முள்வெளி முகாம்களும் உலகம் உள்ளளவும் அதனை உணர்த்திக் கொண்டே இருக்கும்.

இலங்கை சிங்கள இனவாத அரசின் போர்க் குற்றங்கள் குறித்து விரிவான விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் போர்க் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேவ்ண்டும் என்றும் தொடர்ந்து கோரிக்கைகள்  கூக்குரலாகவும் போர்க்குரலாகவும் வெளிப்பட்டுக் கொண்டே இருப்பினும் அப்பாவித் தமிழனின் அழுகுரல் இந்த பூமிப்பந்தில் யாருக்கும் எட்டவில்லை. இந்தியா இதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டும் தமிழர்களின் கோரிக்கைகள் அலட்சியப்படுத்தப்பட்டுக் கொண்டே வருகிறது.

சானல் 4 தொலைக்காட்சி இலங்கையின் போர்க்குற்ற பயங்கரங்களை அம்பலப்படுத்தியது. இருப்பினும் இலங்கை சர்வதேச அரங்கில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படவில்லை. இந்நிலையில் அண்மையில் அதே சானல் வெளியிட்ட புகைப்பட ஆவணம்  மனித மனம் கொண்ட அனைவரையும் கலங்க வைத்துள்ளயது, கதற வைத்துள்ளது. 12 வயது பச்சிளம் பாலகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட விதம் இலங்கையின் இரக்கமற்றத் தனத்தை அம்பலப்படுத்தியுள்ளது. 

இன்னும் ஏன் இலங்கை, போர்க்குற்ற விசாரணை வளையத்தில் கொண்டு வரப்படவில்லை. ராஜபக்சேயும் அவரது சகோதரர் கோத்தபய ராஜபக்சேயும் இன்னும் ஏன் விசாரணை வளையத்தில் கொண்டு வரப்படவில்லை என்ற வினாக்கள் சர்வதேச அளவில் எழும்பியுள்ளது. இலங்கை இனப்படுகொலை போர்க்குற்ற விசாரணைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும். அதற்கு இந்தியா முழுமுயற்சி எடுக்க வேண்டும். மனிதகுல விரோத சக்திகள் தண்டிக்கப்பட வேண்டும்.

(எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ்)

வெள்ளி, 25 ஜனவரி, 2013

முஸ்லிம்களின் விஸ்வரூபம்...

https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcRxm2qADHa11OMP668ipPha2L7gxQASw-0_WBvddp3T40F8zxOOLw
கடந்த சில மாதங்களாகவே "விஸ்வரூபம் என்ற தமிழ்த்  திரைப்படம் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கேவலப்படுத்தும் நோக்கோடு எடுக்கப்பட்டுள்ளது" என்ற குரல் எழுந்து வந்ததை அறிவோம். இத்திரைப்படம் வெளியாகும் முன்பாக, தமிழ்நாட்டு முஸ்லிம் அமைப்புகளுக்குத் திரையிட்டுக் காட்ட வேண்டும் என்ற முஸ்லிம் அமைப்புகளின் உறுதியான வேண்டுகோளுக்கிணங்க 21.01.2013 அன்று இத்திரைப்படத்தின் Preview அவர்களுக்குக் காட்டப் பட்டது.

துப்பாக்கி என்ற படத்தைத் திரையிட்டுக் காட்டிய திரைப்படக் குழுவினர் பிரஸ் மீட் ஒன்றினை வைத்து நீலிக் கண்ணீர் வடித்து ஏமாற்றியது போன்றே தமது படத்தைப் பார்க்கும் முஸ்லிம் அமைப்பினரையும் எப்படியும் சமாதானம் செய்துவிடலாம் என்பது கமலின் யூகம்.
ஆனால் விஸ்வரூபம்  திரைப்படத்தைப் பார்த்த அனைத்து முஸ்லிம் தலைவர்களும் "இந்திய வரலாற்றிலேயே இது போன்று முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் கேவலப்படுத்தும் ஒரு படம் வெளியாகவே இல்லை!" என்று அதிர்ச்சியுடன் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

முஸ்லிம்களைத் தவறாகச் சித்திரிப்பதால் "விஸ்வரூபம் திரைப்படத்தைத் திரையிட அனுமதிக்கக்கூடாது!" என்றும் "கமல்ஹாஸன் மீதும் இப்படத்துக்கு அனுமதி வழங்கிய சென்சார் போர்டு மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!" என்றும் முஸ்லிம் அமைப்புகள் ஒரு சேரக் கோரிக்கை விடுத்துள்ளன.

இது தொடர்பாக, சென்னை மாநகரக்  காவல்துறை ஆணையரிடமும் தமிழக உள்துறைச் செயலரிடமும் முஸ்லிம் அமைப்புகள் ஒன்றிணைந்து புகார் மனு அளித்துள்ளன. இதனைத் தொடர்ந்து, விஸ்வரூபம் படத்தினைத் திரையிட 15 நாட்களுக்குத் தமிழக அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், "சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காமல் படத்தைத் திரையிட அனுமதிக்க முடியாது" என்றும் அந்தத் தடை உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏற்படவிருந்த ஒரு பெரிய சமூகப் பிரச்னையை, அது உருவாகும் முன்பே இஸ்லாமிய அமைப்புகள் ஒன்றிணைந்து போராடித் தடுத்துள்ளன. இது  மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

படத்தின் Preview பார்த்தவர்களில் ஒருவரான தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினர் பேரா. ஜவாஹிருல்லாஹ், பி.பி.சி.க்கு அளித்துள்ள பேட்டியில், "இஸ்லாமியர்கள் தம் உயிர் எனப் போற்றும் குர்ஆன், பயங்கரவாதிகளின் கையேடாக இத்திரைப்படத்தில் சித்திரிக்கப்பட்டுள்ளது. சிறு வயதிலிருந்தே இஸ்லாமியர்கள் பயங்கரவாதிகளாக வளர்வதாக துவேஷத்துடன் இப்படத்தில் காட்டப்படுகிறது. மாமன்-மச்சான் என உரிமையுடன் பேசி நல்லிணக்கத்துடன் வாழும் நம் மண்ணில் இது போன்ற படங்கள், அமைதியைக் கெடுத்துவிடும். முழுக்க முழுக்க இஸ்லாமிய எதிர்ப்புப் பிரச்சார நோக்கத்துடன் இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்த் திரையுலக வரலாற்றில் இப்படி ஒரு பிரச்சாரப் படம் வந்தது இல்லை" என்று கூறியுள்ளார்.

இந்தத் திரைப்படத்தில் இஸ்லாம் தவறாகச் சித்திரிக்கப் பட்டுள்ளது என்பதை அறிந்தவுடன் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு அறிவித்த கண்டனமும் இந்தியத் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் எஸ்.எம் பாக்கர் போன்றோர் இதற்கு எதிராக உடன் குரல் கொடுத்ததும் நினைவுகூரத் தக்கன.

முஸ்லிம்களை ஏதோ பிரியாணி தின்பதற்காக மட்டும் பிறந்தவர்கள் போல், அண்டா பிரியாணி கேட்டுக் கொச்சைப்படுத்திய கமல்ஹாசனுக்கு, நாங்களும் சளைத்தவர்கள் அல்லர் என்று, "விஸ்வரூபம் இஸ்லாமியர்களைப் புண்படுத்தவில்லை என்றால் பிரியாணி தரத் தயார்" என்று அதிரடி அறிவிப்பு செய்து பதிலடி கொடுத்த தேசியலீக் கட்சியினரும் இங்கே நினைவு கூரத் தக்கவர்கள்.

அதென்ன திரைப்படங்களில் தீவிரவாதிகள் என்றாலே எப்பவும் முஸ்லிம்கள்? அப்பாவி முஸ்லிம்களின் மீது இத்தனை நாட்களாக திட்டமிடப்பட்டிருந்த பழிக்கு பின்னால் இருந்த மதவெறியர்களின் சதி அம்பலமாகிக் கொண்டே வருவது இன்னும் புரியவில்லையா? அல்லது அதைப் பற்றி பேசினால் "தேச பக்தி" வியாபாரம் செய்து கல்லா கட்ட முடியாதா?


மாலேகான், சம்ஜோதா எக்ஸ்பிரஸ், அஜ்மீர் தர்கா, ஹைதராபாத் மக்கா மசூதி, தென்காசி ஆர்.எஸ்.எஸ் அலுவலகம், நான்டட், கோவா, பெங்களூர் என நாட்டில் நடந்த அநேக குண்டுவெடிப்புகளின் பின்னணியில் ஹிந்துத்துவா ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதம் செயல்பட்டுள்ளது என்பது உறுதியாகியுள்ளது. அது மட்டுமின்றி, குண்டு வெடிப்புகளை நடத்திய நேரத்தில், கோட்சே காலத்திலிருந்து தொடரும் அதே யுக்திப்படி, முஸ்லிம்கள் அந்தப் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டதாகத் திசை திருப்ப, சம்பவ இடத்தில் அரபி/உருது நோட்டீஸ்கள், தொப்பி, தாடி போன்றவற்றை விட்டுச் சென்றும் குண்டுவெடிப்பு நடந்த உடனேயே ஏதாவது முஸ்லிம் அமைப்பின் பெயரில் இ-மெயில் அனுப்பியும் திட்டமிட்ட சதிச் செயலில் ஈடுபட்டதும் இதே ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் தாம் என்பதும் உறுதியாகியுள்ளன.

ஒவ்வொரு நாளும் காவித் தீவிரவாதிகளைப் பற்றி ஒவ்வொரு உண்மையாக வெளிவந்து இந்திய மக்களைப் பீதிக்கு உள்ளாக்கும் நிகழ்வுகளை அறிவிக்கும் ஊடகங்களைக் கமல்ஹாசன் பார்ப்பதில்லையா? இந்த உண்மையை அப்படியே படமாக எடுக்க கமல்ஹாஸனுக்குத் தைரியம் இருக்கிறதா?

உண்மைகளைப் படமாக எடுப்பதுதான் நல்ல கலைஞனுக்கு அழகு! அப்படிப்பட்டவனைத்தான் தைரியமான கலைஞன் என்றும் கூற முடியும். கமல் தைரியமான கலைஞன் எனில், ஹிந்துத்துவா தீவிரவாதம் குறித்து ஒரே ஒரு படமாவது எடுத்துக் காட்டட்டுமே!

மத்திய உள்துறை அமைச்சர் உண்மையைக் கூறியதற்கே அவருக்கு எதிராக போராட்டமாம். இன்னும், மற்றொரு எம்.பி கூறுகிறார் - உண்மையைக் கூறவே ஒரு தைரியம் வேண்டுமென!

இங்கே உண்மையைக் கூற, கமல் போன்ற உலக நாயகர்(!)களுக்குத் தைரியமில்லை. இவரெல்லாம் தேசபக்தி குறித்துப் பேசி நகைக்க வைக்கிறார். ஹிந்துத்துவ பயங்கரவாதிகள் முஸ்லிம்களைத் தனிமைப்படுதுவதற்காகக் கையிலெடுக்கும் ஆயுதம்தான் "தேசபக்தி". அதனை கமலும் கையிலெடுத்ததிலிருந்து அவரின் நடுநிலை பல்லிளிக்கிறது!  கமலுக்கு அறிவுசீவி முற்போக்கு வேடம் போட நாத்திக முகமூடியும், சிறுபான்மையினர் ஆதரவுப்பேச்சு ஒப்பனையும்!  பிழைப்புக்குப் பெரும்பான்மையைத் திருப்திப்படுத்த உன்னைப்போல் ஒருவன்; விஸ்வரூபமும்! வெட்கக் கேடு!

இந்த நிலையில் நாம் தமிழர் இயக்கத் தலைவரும், இயக்குநருமான சீமான், "இதுபோன்று படம் எடுப்பவர்கள் உள் நோக்கத்தோடுதான் படம் எடுக்கின்றனர்" என்று குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து "திரைப்படங்களில் தீவிரவாதிகள் முழுவதும் முஸ்லிம்களாக இருப்பார்கள். காபரே டான்ஸ் ஆடுபவர்களெல்லாம் கிறிஸ்தவர்களாக இருப்பார்கள். இவ்வாறு தொடர்ச்சியாகப் படங்களில் காட்டுவதன் பின்னணியில் ஒரு திட்டமிட்ட செயல் உள்ளதோ என்று சந்தேகப்படத்தான் வேண்டியுள்ளது. விஸ்வரூபத்தின் மீதான தடை நிச்சயம் சரியானதே!" - என  அவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சுன்னத் ஜமாத் பேரவையின் பொதுச் செயலாளரான மேலை நாசர் என்பவர் இந்தத் திரைப் படத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருக்கிறார். முன்னாள் தவ்ஹீதுவாதியும் இயக்குனருமான அமீரோ விஸ்வரூபம் பற்றி இதுவரை வாயேதும் திறக்கவில்லை.

விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பாகத் தமிழக அரசு விதித்துள்ள இந்தப் 15 நாட்கள் தடை மட்டுமல்லாமல், இந்தத் திரைப்படத்திற்கு நிரந்தரத் தடை விதிக்க  வேண்டும். இனி சினிமாக்காரர்கள் எவரும் இல்லாததையும் பொல்லாததையும் இட்டுக் கட்டி முஸ்லிம்களை  அவதூறாகச் சித்திரிக்கும் திரைப்படத்தை எடுக்க நினைத்துக்கூடப் பார்க்கக் கூடாது.

தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் விஸ்வரூபம் என்ற விஷத் திரைப்படம் தடை செய்யப்பட்டுள்ளதோடு மட்டுமின்றி, குவைத், அமீரகம், சிங்கப்பூரைத் தொடர்ந்து உலக அளவில் அந்தந்த நாட்டு அரசுகளே இத்திரைப்படத்துக்குத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளன. கத்தர் நாட்டில் இன்று திரையிடப்படுவதாக இருந்த (24-01-2013) இப்படம் இறுதி நேரத்தில் திரையரங்கை விட்டு தூக்கி வீசப்பட்டிருக்கிறது.

இத்தகைய நிகழ்வுகளில் சமூகம் சந்திக்கும் ஒரு நன்மையும் உண்டு. அது சமூக ஒற்றுமை. சமீப காலச் சிக்கல்களில் தமிழக முஸ்லிம் அமைப்புகள் சமூகத்தின் மீதான பொதுவான பிரச்சனைகளில் கை கோர்த்துக் குரல் கொடுக்க ஆரம்பித்திருப்பது ஒரு  நல்ல மாற்றம். சமூக நலனை முன்னிறுத்தி இணைந்துள்ள இக்கரங்களின் ஒற்றுமையான முயற்சி வலுப் பெறட்டும்.

-ஜாஃபர்
சத்தியமார்க்கம்.காம்

ஞாயிறு, 16 டிசம்பர், 2012

வியாழன், 5 ஜூலை, 2012

தமுமுக குவைத் மண்டலம் நடத்தும் - சமூக மேம்பாட்டு விழிப்புணர்வு கூட்டம்



நாள்: ஜூலை 6, 2012,வெள்ளி, மாலை 4 மணி
இடம்: ஜம்இய்யத்துல் இஸ்லாஹ் - ரவ்தா - குவைத்
சிறப்புரை:
பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் MLA
சகோ. அஸ்லம் பாஷா MLA
பேரா. கே.ஏ. தாஜுத்தீன்

https://lh4.googleusercontent.com/-i9Rpyiq4Pt0/T_FidZj0p6I/AAAAAAAAFm8/sJp1gPV_q3s/s722/TMMK_Kuwait_Image4.jpg

ஞாயிறு, 17 ஜூன், 2012

சனி, 24 டிசம்பர், 2011

சிறுபான்மையினருக்கான உள்ஒதுக்கீடு ஒரு மோசடி - பிரதமருக்கு கறுப்புக்கொடி காட்டும் போராட்டம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

மத்திய அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் சிறுபான்மையினருக்கு பிற்படுத்தபட்டோருக்கான 27 விழுக்காடு இடஒதுக்கீட்டில்  4.5 விழுக்காடு உள் இடஒதுக்கீடு வழங்கப்படும் என நேற்று மத்திய அமைச்சரவை எடுத்துள்ள முடிவு ஒரு ஏமாற்று வித்தையாகும்.

2004ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் சிறுபான்மை மக்களுக்கு மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தனி இடஒதுக்கீடு அளிக்கப்படுமென வாக்குறுதி அளித்தது. 2004 மே மாதம் மன்மோகன் சிங் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைக்கபட்டபோது அதன் குறைந்த பட்ச செயல் திட்டத்திலும் சிறுபான்மை மக்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக ஒரு ஆணையம் அமைக்கப்பட்டு ஆறு மாதங்களுக்குள் அதன் அறிக்கை பெறப்பட்டு இடஒதுக்கீடு அளிக்கப்படுமென அறிவிக்கப்பட்டது. இதன் பிறகு அக்டோபர் 2004ல் மத்திய அரசு நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா தலைமையில் மத மற்றும் மொழி சிறுபான்னைமயினருக்கான தேசிய ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் மே 2007ல் தனது அறிக்கையை சமர்பித்தது. இந்த ஆணையத்தின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதை மன்மோகன் சிங் அரசு தாமதப்படுத்தியது. 2009 மே மாதம் மீண்டும் நாடாளுமன்றத் தேர்தல் வந்த போது காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் முஸலிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படுமென வாக்குறுதி அளிக்கப்பட்டது. மீண்டும் மன்மோகன் சிங் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைந்தது. இதன் பிறகும் மன்மோகன் சிங் அரசு மிஸ்ரா ஆணையத்தின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை.

இந்த ஆணையத்தின் அறிக்கை பத்திரிகைகளில் வெளியான பிறகு டிசம்பர் 2009ல் மிஸ்ரா ஆணையத்தின் அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது உ.பி. உட்பட ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் வரும் சூழலில் சிறுபான்மையினருக்கு 4.5 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கப்படுமென மத்திய அமைச்சரவை நேற்று முடிவு செய்துள்ளது. மிஸ்ரா ஆணையததின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் மிஸ்ரா ஆணையம் தனது பரிந்துரையில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 15 விழுக்காடு மதவழி சிறுபான்மையினருக்கு அளிக்க வேண்டும். அதில் 10 விழுக்காடு முஸ்லிம்களுக்கு அளிக்க வேண்டுமென குறிப்பிட்டார்கள்.

இவ்வாறு இடஒதுக்கீடு அளிப்பது அரசியலமைப்புச் சட்டத்தின் நோக்கத்திற்கு முரணானது இல்லை என்றும் ஆணையம் தெரிவித்தது.  ஆனால் இவ்வாறு இடஒதுக்கீடு அளிப்பது மத்திய அரசுக்கு சிரமமாக இருந்தால் மண்டல் ஆணைய பரிந்துரையின் படி பிற்படுத்த்ப்பட்ட வகுப்பினருக்கான 27 விழுக்காடு இடஒதுக்கீட்டில் மதவழி சிறுபான்மையினருக்கு 8 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்றும் அதில் 6 விழுக்காடு பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு அளிக்க வேண்டுமென பரிந்துரைச் செய்தது. ஆனால் தற்போது மத்திய அரசு மிஸ்ரா ஆணையத்தின் இந்த  இரண்டு பரிந்துரைகளையும் ஏற்றுக் கொள்ளாமல்  இதர பிற்படுத்தப்பட்டோர பட்டியலில் இடம் பெற்றுள்ள அனைத்து சிறுபான்மை வகுப்பினருக்கும் 4.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு அளிக்க முடிவுச் செய்துள்ளது.

 இந்த உத்தரவின் படி இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள முஸ்லிம்கள், கிறிஸ்த்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள் முதலியோருக்கு இந்த உள்ஒதுக்கீடு அளிக்கப்படும். இத்தகைய இடஒதுக்கீட்டினால் எந்தவொரு பலனும் முஸ்லிம்களுக்கும் இதர சிறுபான்மை மக்களுக்கும் கிடைக்கப் போவதில்லை. மிஸ்ரா ஆணையம் 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு தனியாக 6 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்க வேண்டுமென பரிந்துரைத்தையும் மத்திய அரசு புறந்தள்ளி முஸ்லிம்களை ஏமாற்றியுள்ளது.

மன்மோகன் சிங் அரசு முஸ்லிம்களுக்கு தொடர்ந்து இடஒதுக்கீடு பிரச்னையில் செய்துவரும் துரோகத்தை கண்டிக்கும் வகையிலும் 4.5 விழுக்காடு இடஒதுக்கீடு என்ற ஏமாற்று வித்தையை உடனடியாக வாபாஸ் வாங்க கோரியும் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க கோரியும் தமிழகத்திற்கு வரும் பிரதமருக்கு சென்னையிலும் காரைக்குடியிலும் கறுப்புக்கொடி காட்டும் பேராட்டத்தை தமுமுக நடத்தும்.

இன்றைய சித்திரம்

இன்றைய சித்திரம்